முள்ளியவளை(Mulliyawalai) கணுக்கேணி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் இருந்த அம்மன் சிலையானது ஒரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையானது வழமையாக மூடிய நிலையிலுள்ள கண்களையுடைய சிலையாகவே காணப்பட்டு வந்தது.
பக்தர்கள் வழமைப்போல நேற்றையதினம்(7) சென்று வழிபட்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் (07.07.2024) காலை திடீரென அந்த சிலையிலுள்ள ஒரு கண் திறந்த நிலையிலும் மற்றைய கண் மூடிய நிலையிலும் மாறி மனித கண்களை ஒத்த நிலையில் தென்பட்டு காணப்படுகின்றது.
இதனை பிரதேசவாசிகள் அதிசயத்துடனும், பக்தி பரவசத்துடனும் பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.