பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு..! அதிகாலையில் பரபரப்பு

16

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (27.5.2024) காலை வெலிகம படவல – பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments are closed.