சமூக ஊடகங்களில் தவறாக பரப்பப்படும் தகவல்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

13

சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (26) இலங்கையில் முதன் முறையாக கொல்ப் அகடமி ஒன்றை ஆரம்பித்து வைத்து  உரையாற்றிய போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கிரிக்கட் விளையாட்டின் மீது ஆபத்தான சேறு பூசல்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, சேறு பூசல்களில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எல்.பி.எல் போட்டித் தொடரின் தம்புள்ள கழகம் தொடர்பிலான சம்பவத்தில் தன் மீதும் மற்றும் சனத் ஜயசூரிய மீதும் குற்றம் சுமத்தப்படுவதாகத் அவர் கூறியுள்ளார்.

விளையாட்டுக் குற்றச் செயல்களை தடுக்கும் சட்டத்தை தாமே அறிமுகம் செய்ததாகவும் உலகில் எங்குமில்லா வலுவான சட்டம் இலங்கையில் காணப்படுவதாகவும் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய இணைய சட்டத்தின் ஊடாக சேறு பூசுவோரின் சமூக ஊடக கணக்குகள் தடை செய்யப்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.