தமிழ் சினிமாவில் சமூக நீதி படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதன்பின் தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தை எடுத்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கிய திரைப்படம் தான் மாமன்னன்.
இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாமன்னன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மாமன்னன் படம் வெளிவந்து ஓர் ஆண்டு ஆகியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் 1 year Of மாமன்னன் என பதிவு செய்து ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், இப்படம் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம். மாமன்னன் திரைப்படம் கடந்து வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் கூறப்படுகிறது.
Comments are closed.