விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. சமையல் உடன் சேர்ந்து காமெடியையும் கலந்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது இந்த ஷோ.
குக் வித் கோமாளி முந்தைய சீசனில் கலந்துகொண்டவர் பிரபல நடிகர் மைம் கோபி. அவர் படங்களில் வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் கலக்கி வருபவர்.
குக் வித் கோமாளி ஷோவுக்கு சென்று வந்த அனுபவம் பற்றி மைம் கோபி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
“அங்கு சென்றாலே எல்லா டென்ஷனும் போய்விடும். அந்த செட் சொர்கம் போல இருக்கும், அதே நேரத்தில் நரகம் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு கோமாளிகள் செய்வார்கள்.”
“குக் வித் கோமாளி ஷோ முடிந்தபிறகு இரண்டு வாரங்களுக்கு நான் மன அழுத்தத்தில் தான் இருந்தேன். அப்படி ஒரு ஷோ அது. அதில் கலந்துகொண்டது பெருமை” எனவும் மைம் கோபி கூறி இருக்கிறார்.
Comments are closed.