நான் மகாராஜா படத்தை பார்க்க மாட்டேன்.. பாடகி சின்மயி சொன்ன காரணம்

18

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் கடந்த ஜூன் 14ம் தேதி ரிலீஸ் ஆனது. நல்ல விமர்சனங்கள் வந்ததால் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அதனால் பெரிய அளவில் வசூல் குவிந்தது. விஜய் சேதுபதி கெரியரில் இது பெரிய கம்பேக் படம் என பலரும் கூறி வருகின்றனர்.

மகாராஜா படத்தை நான் பார்க்க மாட்டேன் என பாடகி சின்மயி கூறி இருக்கிறார்.

அந்த படத்தில் வைரமுத்து பாடல் எடுத்து இருப்பதால் நான் பார்க்க மாட்டேன் என அவர் கூறி இருக்கிறார்.  சில வருடங்களுக்கு முன்பு வைரமுத்து மீது சின்மயி மீ டு புகார் கொடுத்து இருந்தார். அதற்கு பிறகு டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டு சின்மயி எந்த தமிழ் படத்திலும் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.