16 வது தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வு! பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0 0

16வது தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி,16வது தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வு, 2025 மே 19 ஆம் திகதி மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நினைவு நிகழ்வு, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவுச்சின்னத்தில் நடைபெறும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சகத்தால் நேற்று ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், ஜனாதிபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர கலந்து கொள்வார்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட, மற்றும் மார்சல் ஒஃப் ஏர்ஃபோர்ஸ் உள்ளிட்ட இராணுவத் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் போர் வீரர்களை கௌரவிப்பதிலும், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நாட்டின் கூட்டு நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதிலும், அனைத்து குடிமக்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.