சினிமா துறை பிரபலங்களின் வாரிசுகள் வந்து பெரிய ஸ்டார் ஆவது வழக்கமான ஒன்றுதான். விஜய், மகேஷ் பாபு உள்ளிட்ட பலரை உதாரணமாக சொல்லலாம்,
தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் மோகன் பாபுவின் குடும்பம் பற்றி எல்லோருக்கும் தெரியும். டோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் சில குடும்பங்களில் அவரது குடும்பமும் ஒன்று.
நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தற்போது தனது குடும்பம் பற்றி அதிர்ச்சி புகார் கூறி இருக்கிறார்.
ஒரு நடிகரின் மகன்கள் எளிதாக ஹீரோவாகி விடலாம், ஆனால் மகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. நான் நடிப்பதற்கு என் அப்பாவே எதிராக இருந்தார்.
எதிர்ப்பை மீறி நான் நடித்தேன். தற்போது மும்பைக்கு சென்று செட்டில் ஆகி அங்கு வாய்ப்பு தேடலாம் என்றால் அதற்க்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது ஆணாதிக்க சமூகம். அதில் பாதிக்கப்பட்டவள் நான் என லட்சுமி மஞ்சு பேசி இருக்கிறார்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருக்கு என அவர் கோபமாக பேசி இருக்கிறார்.
Comments are closed.