குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மீனா.
அதன்பின் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கியவர் முன்னணி நாயகர்களான ரஜினி, கமல், அஜித், விஜயகாந்த், சத்யராஜ் என பலருடன் படங்கள் நடித்துள்ளார்.
கண்ணழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார்.
தில்லானா தில்லானா என இடுப்பை ஆட்டி ரசிகர்களை மயக்க வைத்தவரை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட மீனாவிற்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவர் விஜய்யுடன் தெறி பின் சில படங்களில் நடித்தவர் இப்போது படிப்பு முக்கியம் என இருக்கிறாராம்.
அண்மையில் ஒரு பேட்டியில் மறைந்த தனது கணவர் வித்யாசாகர் குறித்து நடிகை மீனா பேசுகையில், எனது கரியர் மீது என்னைவிட எனது கணவர்தான் முக்கியத்துவம் கொடுத்தார். நான் சமைத்து எனது கணவர் சாப்பிட்டிருக்கிறார்.
வித்யாசாகர் நன்றாகவே சமைப்பார், ஆனால் என்னிடம் இதை செய்துகொடு அதை செய்துகொடு என்று ஆசையாக கேட்டதே இல்லை என எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.
Comments are closed.