இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் ஏற்பட்டால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் ஏதேனும் ஓர் வகையில் போர் மூண்டால் அது இலங்கைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் நடந்தாலும் அது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக அரங்கில் போர் பலம் கொண்ட இரண்டு முக்கிய நாடுகளாக இந்தியாவையும் பாகிஸ்தானையும் கருத முடியும் எனவும் அந்த வகையில் ஒப்பீட்டால் இலங்கை ஒர் நெத்தலி போன்றதொரு சிறியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு உணவு உட்கொண்டு வாழ்க்கையை முன்னெடுப்பதாகவும், இந்திய பாகிஸ்தான் போர் மூண்டால் அதனால் இலங்கை மக்கள் இழப்பதற்கு விசேடமாக ஏதுவுமில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.