விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தொகுப்பாளராக இருந்து வருகிறார் மணிமேகலை. அவரை அவ்வப்போது கோமாளியாகவும் பயன்படுத்தி வருகிறது விஜய் டிவி.
மணிமேகலை சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வரும் நிலையில் தான் வாங்கி இருக்கும் பார்ம் ஹவுசில் எடுக்கும் வீடியோக்களை அதில் வெளியிட்டு வருகிறார்.
மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் கஷ்டப்பட்டு 2 லட்சம் ருபாய் கொடுத்து வாங்கிய KTM பைக் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருடு போனது.
தற்போது மணிமேகலை மீண்டும் ஒரு ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி இருக்கிறார். வாங்கி 9 மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது அதற்கு பூஜை போடுகிறேன் என வீடியோ வெளியிட்டு உள்ளார் அவர்.
அந்த வீடியோவில் மணிமேகலை தங்களது KTM பைக்கை திருடியவனிடம் கெஞ்சி இருக்கிறார். “இந்த ஸ்கூட்டர் டயர் ஆரஞ்சு கலரில் இருப்பதை பார்க்கும்போது அந்த KTM பைக் தான் நினைவுக்கு வருகிறது.”
“இப்படி எல்லா வீடியோவிலும் கெஞ்சுறேனே.. இப்போதாவது வந்த திருடன் நான் தான் எடுத்தேன் என வந்து சொல்கிறானா பாரு” என ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார் மணிமேகலை.
Comments are closed.