முன்னைய அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு ஏற்படப் போகும் சிக்கல்

0 5

முன்னைய அரசாங்கங்களின் பதவிக்காலத்தில் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியாயாதிக்க சபைகளில் முன்னைய காலங்களில் நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து தற்போது தனியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் பின்னர் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேநேரம் குறித்த அதிகாரிகளுக்கு ஊழல், மோசடிகளை மேற்கொள்ள யாரேனும் அரசியல்வாதிகள் ஆதரவு வழங்கியிருந்தால் அவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.  

Leave A Reply

Your email address will not be published.