பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா.. கொழும்பில் விசேட பாதுகாப்பு வளையம்

0 5

கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் வாகனத்தில் இருந்து இறங்கியது தொடக்கம், மேடையில் ஏறி, மீண்டும் வாகனத்தில் ஏறும் வரை விசேட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தார்.

மேடையில் உரையாற்றும் போது அதற்கான காரணத்தை வெளியிட்ட பிரதமர் ஹரிணி, முன்னொரு காலத்தில் தெமட்டகொடை என்பது பாதாள உலகக்கும்பல்கள் கோலோச்சிய, போதைப்பொருள் வர்த்தகர்கள் ஆதிக்கம் செலுத்திய பிரதேசமாகும்.

அதன் காரணமாகவே எனக்கு இன்று விசேட பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு எனக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தெமட்டகொடை என்பதற்காக அவ்வாறு பாதுகாப்பு வழங்குவதற்கு நேர்ந்துள்ளமை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். அந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் கருத்து வௌியிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.