இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதாரம் பற்றிய எனது புரிதலின் படி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் நாடு வீழ்ச்சியடையும்.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் பட்சத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் இலங்கையை கவனித்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.