கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வர்த்தகர்

0 5

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (24) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 10 இலட்சத்து 05 ஆயிரம் ரூபா பெறுமதியான ஏலக்காய் தொகையுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான வர்த்தகர் வெளிநாட்டிலிருந்து இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த 6 பயணப்பொதிகளிலிருந்து 107 கிலோ ஏலக்காய் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.