உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நடந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில்,அது தொடர்பில், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருக்கின்றன.
இந்த நிலையில், முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய செயல்முறையை நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தை, ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச், இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.