இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆளும் கட்சியில் போட்டி

0 1

சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இலங்கையை இஸ்லாமிய இராச்சியமாக மாற்ற வேண்டுமென முயற்சிகளை மேற்கொண்ட பலரும் இன்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1990களில் இருந்து இலங்கையை இஸ்லாமிய தேசமாக மாற்றுவதற்கான முனைப்புக்களில் ஈடுபட்ட, அதற்கான பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பியவர்கள் பலர் இன்று எவ்வித வெட்கமும் இன்றி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி வேட்பாளராக புஹாரி மொஹம்மத் பிரிதோஸ் நலீம் என்பவர் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜமாதே இஸ்லாம் போன்ற அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு செய்தால் கர்தினால் உள்ளிட்ட கத்தோலிக்க சபை மகிழ்ச்சி அடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் ஊடாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.