நீர்கொழும்பு தெஹிமல் வத்த பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நீண்ட காலமாக இயங்கி வந்த ஒரு இரகசிய சூதாட்ட மையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, குறித்த சுற்றிவளைப்பை முன்னெடுத்த நிலையில், 17 நபர்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 10 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவர் வேலைக்குச் சென்ற பிறகு மனைவிகள் மற்றும் சில குடும்பங்களில், கணவன்-மனைவி இருவரும் இணைந்து சிறிது காலமாக இங்கு ரகசியமாக சூதாட்டம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பொலிஸ் அறிக்கைகளின்படி, தெஹிமல் வத்த வீதியில் குறித்த சூதாட்ட செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
எனினும் வீட்டின் உரிமையாளர் தனது மற்றுமொரு சொந்த வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த சூதாட்ட மையம் குறித்து பொலிஸாருக்கு அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த இடம் தரகர்களால் இரகசியமாக நடத்தப்படமை தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடத்திய சோதனையின் போது, .425,000 ரூபா பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்ட சிலர் தங்கள் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க நகைகளை கூட அடகு வைத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு மையம் வழக்கமாக இரவு 9.00 மணிக்குத் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில குடும்பங்களில், பெற்றோர் இருவரின் சூதாட்ட அடிமைத்தனத்தால் அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சில குழந்தைகள் இதனால் பாடசாலைக்கு செல்லாத நிலை காணப்படுவதாகவும் பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.