முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10 மணிக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி காலை 09.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், சில காரணங்களால் அன்றையதினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே எதிர்வரும் 25ஆம் திகதி காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு இன்றையதினம் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.