இலங்கை இ – கடவுச்சீட்டுக்கு மாறும் வரை, தேவையை பூர்த்தி செய்வதற்காக, தேல்ஸ் DIS பின்லாந்து OY இலிருந்து 1.1 மில்லியன் இயந்திரம் படிக்கக்கூடிய கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக, அமைச்சரவை ஒப்புதல் கோரப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு ஐந்து மில்லியன் இ – கடவுச்சீட்டுக்களுக்காக, குழப்பமான கேள்விப்பத்திரத்தை வென்ற நிறுவனமே DIS பின்லாந்து OY தேல்ஸ் ஆகும்.
எனினும், குறித்த கேள்விப்பத்திர கோரலில் தோல்வியடைந்த ஏலதாரரான எபிக் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சவால் செய்து, தேல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவைப் பெற்றது பின், அந்த தடையுத்தரவு நீக்கப்பட்டது.
இந்த நிலையில், சட்ட மா அதிபர் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இ – கடவுச்சீட்டு திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை, தேல்ஸிடமிருந்து 1.1 மில்லியன் சாதாரண கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதியைப் பெற அமைச்சரவை முன்மொழிவு சமர்ப்பிக்கப்படவுள்ளது.