2019 – ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய முக்கிய விசாரணையில் வெளியாகும் புதிய தகவல்களை உடன் வெளியிட முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், “மௌனமாக இருந்தவர்கள் இப்போது பேசத் தொடங்கியுள்ளனர். தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியவர்கள் கூட இப்போது தகவல்களை அம்பலப்படுத்தப்படுகிறார்கள்.
எனவே, எதிர்வரும் சில விசாரணைகள் புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை உடனடியாக வெளியிடப்படாமல் போகலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் மூன்றில் ஒரு பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்போம் என தெரிவித்திருந்தது.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களின் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டது.
அந்தவகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அண்மையில், கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மூலமாகவும் பல தகவல்கள் தெரிய வந்துள்ளதாக குற்றபுலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.