பிள்ளையானால் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த பல முக்கிய தகவல்கள் அம்பலம்..!

0 5

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மூலம் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பல முக்கிய உண்மைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று இதனை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தரை கடத்திய சம்பவத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார்.

இதன்போது 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட அவர் மீது ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பல சாட்சிகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஏராளமான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

அவற்றில் குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல்களில் பிள்ளையானின் தொடர்பு குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த மேலும் பல சாட்சிகள் எதிர்காலத்தில் குற்றப் புலனாய்வுத் துறையின் முன் சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் 6ஆவது ஆண்டு நிறைவுக்கு முன்னர், தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து கண்டறியப்படும் என தற்போதைய அரசாங்கம் தெரிவித்தது.

அந்தவகையில், விசாரணைகளுக்கு மத்தியில், பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.