வெற்றி படங்களின் நாயகன் கவினின் சம்பளம், சொத்து மதிப்பு விவரங்கள் என்ன தெரியுமா?

10

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி பின் வெள்ளித்திரையில் சாதிக்க வந்தவர்கள் பலர் உள்ளார்கள்.

அவர்களின் லிஸ்டில் இடம்பெற்றவர் தான் நடிகர் கவின். கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி என சீரியல்கள் நடித்து பிரபலமானவர் பின் பிக்பாஸிலும் கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சி மூலம் தனது பெயரை கெடுத்துக்கொண்டார் கவின். பிக்பாஸை தொடர்ந்து லிஃப்ட் படத்தில் நாயகனாக நடித்து வெற்றிக் கண்டார், அதன்பிறகு டாடா என்ற படத்தில் கவின் சிறப்பான நடிப்பை வெளிக்காட்ட படமும் வெற்றி அடைந்தது, அவரின் திரைப்பயணமும் வளர்ச்சி அடைந்தது.

கடைசியாக ஸ்டார் என்ற படம் நடித்தார், அப்படமும் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் கவின் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். லிஃப்ட், டாட் படங்களின் வெற்றிக்கு பின்னர் ஒரு படத்துக்கு ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

இதன்மூலம் 1 ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம். இதன் அடிப்படையில் கவினின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 5 முதல் ரூ. 7 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

சென்னையில் ஒரு பிளாட் இருப்பதாகவும், சொந்தமாக ஒரு காரும் வைத்துள்ளாராம்.

Comments are closed.