கொடூரமான முறையில் நடந்த கொலை.. நடிகர் தர்ஷனின் நெருங்கிய நண்பர் கிச்சா சுதீப் சொன்ன விஷயம்!!

13

நடிகர் தர்ஷன் மனைவியை பிரிந்து, நடிகை பவித்திர கௌடா உடன் வாழ்ந்து வந்துள்ளார். அண்மையில் ரேணுகாசாமி என்பவர், பவித்தரவை ஆபாசமாக திட்டியும் சில ஆபாச வீடியோக்களையும் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நடிகர் தர்சன், ரேணுகா சாமியை கொடூரமாக அடித்துக்கொன்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதை பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

பிரபல நடிகரும், தர்ஷனின் நெருங்கிய நண்பரான கிச்சா சுதீப் இது தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், “நட்பு வேறு, நீதி வேறு. கொல்லப்பட்ட ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கிச்சா சுதீப் தெரியவித்துளார்.

Comments are closed.