தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கடைசியாக இவரது நடிப்பில் சலார் திரைப்படம் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது.
ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் ‛Ask Me Anything’ என்ற பெயரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசனும் பதிலளித்து வருகிறார்.
அப்போது ரசிகர் ஒருவர், “தென்னிந்திய மொழியில் ஏதாவது ஒன்றை கூறுங்கள்” என்று கேட்டார்.
இதற்கு அவர், “இனவாதம் பார்வை என்பது சரி இல்லை. தென்னிந்திய மக்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் எனக்கூறுவது சரியில்லை. அது அழகானதாகவும் இல்லை. நீங்கள் எங்களை சரியாக புரிந்துகொள்ளவில்லை. இது தொடரும் பட்சத்தில் ‛மூடிட்டு போடா” என்று தென்னிந்திய மொழியில் சொல்லுவேன்” என்று ஸ்ருதி ஹாசன் ரிப்லை செய்துள்ளார்.
Comments are closed.