நடராஜா ரவிராஜின் கொலையுடன் பிள்ளையானுக்கு தொடர்பு

0 0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை சம்பவத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரட்நாயக்க என்பவரினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கீர்த்தி ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் ராஜபக்ஷர்கள் தொடர்பு படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் கொழும்பின் தமிழ் வர்த்தகர்களிடம் கடற்படை மற்றும் ராணுவ படையைச் சேர்ந்த கும்பல்கள் கப்பம் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்கள் தொடர்பில் அவர் சட்டத்தரணியான நடராஜா ரவிராஜ் தகவல்களை திரட்டி இருந்தார் என கீர்த்தி ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட விருந்த நிலையில் நடராஜா ரவிராஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ரவி ராஜிடம் தாம் உயிராபத்து குறித்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

சதுரிகா ரணவக்க என்ற பயிலுனர் சட்டத்தரணி முன்னிலையில் தாம் ரவிராஜிடம் தாம் இதனைக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது பூத உடல் வைக்கப்பட்டிருந்த மலர்ச்சாலைக்கு தான் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பான சகல விபரங்களையும் எழுதி கீர்த்தி ராட்நாயக்க என தமது பெயரையும் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிற்காலத்தில் இலங்கையின் பிரதான ஊடக நிறுவனமொன்று இந்த தகவல்களை திரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பவமானது கடற்படை கப்பம் கோரும் கும்பல் பிள்ளையானுடன் இணைந்து மேற்கொண்ட குற்றச்செயல் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிள்ளையான் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் என அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.