அரகலய போராட்டகாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள்

0 7

2022 – அரகலய போராட்டத்துடன் தொடர்புடைய 3,882 பேர் மீது ஒன்பது வெவ்வேறு சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து நீதி கோரி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிததம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட குறித்த கடிதத்தில், போராட்டங்களின் போது 11 பேர் உயிரிழந்ததை எடுத்துக்காட்டுவதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மாத்திரமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீதமுள்ள குடும்பங்கள் தொடர்ந்து கடுமையான துன்பங்களை எதிர்கொள்வதுடன் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டக்கார்கள் தொடர்பாக 709 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் விளைவாக ஆயிரக்கணக்கான தனிநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பரந்த அளவிலான சட்டங்களை உள்ளடக்கியதுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விகிதாசாரத்தன்மை மற்றும் நியாயத்தன்மை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியை கோரி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.