சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மிகவும் சூட்சுமமான முறையில் அதிகாரிகளிடம் தனது நடத்தையை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விசாரணைகளின் போது மிக அதிகமான பொய்யான தகவல்களை அவர் கூறுவதாக பொலிஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அவர் தலைமறைவான முதல் நாளில் அவர் தலைமறைவாகியிருந்த இடம் தொடர்பில் மாத்திரமே இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும், விசாரணைகளின் போது பொய்யான தகவல்களை வெளியிடுவதுடன், சூட்சுமமான முறையில் தனது நடத்தையை வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், மாகந்துரே மதூஷ் மற்றும் ஹரக் கட்டா உள்ளிட்டவர்களை விட மிகவும் சூட்சுமமான முறையில் தேசபந்து நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.