ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த வரி விதிப்பு பின்னணி அடிப்படையிலும், சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைப் போன்ற நாடுகள் பாரிய அளவில் வரி விதிப்பதால் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை தொடர்பில், ஒரு நாடு என்ற வகையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் சீனா, இந்தியா, இலங்கை மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஏற்றுமதி பொருட்கள் மீது வரிகளை விதித்துள்ளார்.
அந்த வகையில் இலங்கை பொருட்கள் மீது 44 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.