பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானை இத்தாலி பிரதமர் முறைத்துப்பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
இத்தாலியில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டுக்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இத்தாலி சென்றிருந்த நிலையில், அவரை இத்தாலி பிரதமரான ஜியார்ஜியா மெலோனி முறைத்துப்பார்ப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
அதாவது, G7 உச்சி மாநாட்டின்போது, கருக்கலைப்பு என்ற தலைப்பிலான விடயத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
G7 உச்சி மாநாட்டின் அறிக்கையில், கருக்கலைப்பு என்னும் வார்த்தையை பயன்படுத்தலாமா வேண்டாமா என்னும் விடயம் குறித்தே விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன் ஜப்பானில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின் அறிக்கையில், கருக்கலைப்பு என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்ட நிலையில், இம்முறை அந்த அறிக்கையில் கருக்கலைப்பு என்னும் வார்த்தைக்கு பதிலாக பாலியல் மற்றும் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகள் என்னும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.