26 வயதில் பிரித்தானிய வீரர் மரணம்! அதிர்ச்சியில் கால்பந்து உலகம்

15

மாண்டெனேக்ரோ கால்பந்து வீரர் மதிஜா சார்கிக் 26 வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Grimsby நகரில் பிறந்த கால்பந்து வீரர் மதிஜா சார்கிக் (26) மாண்டெனேக்ரோ தேசிய அணிக்காக விளையாடி வந்தார்.

கோல் கீப்பரான மதிஜா சார்கிக் (Matija Sarkic) பல பிரித்தானிய கால்பந்து கிளப்களில் விளையாடியுள்ளார். மில்வால் (Millwall) அணிக்காக 32 போட்டிகள் என மொத்தம் 110 கிளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில் Budva நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் இருந்த சார்கிக் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இயற்கையான காரணங்களால் மரணம் ஏற்பட்டதாக அறிக்கைகள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் பொலிஸார் சார்கிக்கின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னணி வீரர் ஒருவர் 26 வயதில் உயிரிழந்த சம்பவம் கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.