ரணிலை ஆதரிக்கும் பிரசாரம் மாத்தறையில் ஆரம்பம்

15

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசின் ரணிலை (Ranil Wickramasinghe) ஆதரிக்கும் பிரசாரம் எதிர்வரும் 30ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது.

இந்தப் பிரசாரத்திற்குரிய ஏற்பாடுகளை மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) முன்னெடுக்கவுள்ளார்.

முன்னதாக, குறித்த பிரசாரத்தை நாளையதினம் (16.06.2024) நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் மாத்தறையில் ஏற்பட்ட வெள்ள நிலையால் 30ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்பின்னர், ஏனைய மாவட்டங்களிலும் அரசின் வேலைத்திட்டங்களை முன்வைத்து, அதன்மூலம் வாக்கு வேட்டை நடத்தும் பிரசாரம் ஆரம்பமாகவுள்ளது.

Comments are closed.