தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

15

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 177,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாட்டில் தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாக திடீர் ஏற்ற இறக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று (15.06.2024) 24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 24,000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 192,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22,200 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 177,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Comments are closed.