நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது.
ஹீரோவாக சந்தீப் கிஷன் அந்த படத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், சில வாரங்களில் தொடங்க வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல் வந்திருக்கிறது.
ஜேசன் சஞ்சய் சமீபத்தில் இசையமைப்பாளர் தமனிடம் படத்தின் கதையை கூறினாராம். அதை கேட்டு தான் ஷாக் ஆகிவிட்டதாக அவர் தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
ஒரு ஹீரோவின் மகன் எப்படி இயக்குனர் ஆனார் என்பதே தனக்கு ஆச்சர்யமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சஞ்சய் தான் விஜய்யின் மகன் என்பதை எந்த இடத்திலும் காட்டிக்கொள்வதில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.