வாகன இறக்குமதி குறித்து வெளியான மகிழ்ச்சித் தகவல்

15

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை நாளைய (15) தினத்திற்குள் இலங்கை (Sri Lanka), இறுதி செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் 3ஆம் காலாண்டிற்குள் பொதுப் போக்குவரத்து மற்றும் விசேட நோக்கங்களுக்கான வாகனங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் 4ஆம் காலாண்டிற்குள் சரக்கு போக்குவரத்திற்கான வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

2025ஆம் ஆண்டில் அனைத்துவித வாகனங்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதிய அறிக்கை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.