புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஆல்யா மானசா… அவரே கொடுத்த அப்டேட், எந்த டிவி?

0 4

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் நாயகியாக நடித்த தொடங்கியதன் மூலம் சின்னத்திரை நாயகியாக களமிறங்கினார் ஆல்யா மானசா.

முதல் தொடரே ஆல்யாவிற்கு வெற்றிகரமாக அமைய அடுத்தடுத்து ராஜா ராணி 2, இனியா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.

அண்மையில் தனது கணவருடன் இணைந்து புதிய வீடு கட்டியவர் தற்போது கேரளாவில் ஆலப்புழாயில் ஒரு போட் ஹவுஸ் வாங்கியுள்ளார், அதன் விலை ரூ. 2 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இனியா சீரியல் முடிந்த கையோடு குடும்பத்துடன் சுற்றுலா செல்வது, விளம்பரம் நடிப்பது, தனியார் நிகழ்ச்சி செல்வது என பிஸியாக இருந்த ஆல்யா மானசா தனது இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது ஒரு ரசிகர் அடுத்த தொடர் குறித்து கேட்க, அதற்கு ஆல்யா மானசா, விரைவில் அடுத்த சீரியல், எந்த தொலைக்காட்சி என்று சொல்லுங்கள் பார்ப்போம் என பதிவு போட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.