பிக் பாஸ் சீசன் 8 தமிழ் தற்போது 10 வாரங்களை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடந்த நிலையியல் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.
ஒவ்வொரு வாரத்தின் துவக்கத்திலும், நாமினேஷன் ப்ராசஸ் மற்றும் கேப்டன் டாஸ்க் நடைபெறும். அந்த வகையில் இந்த வாரம் நடந்த கேப்டன் டாஸ்கில் வென்று, இந்த வாரத்தின் தலைவராக விஜே விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதே போல் இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றுள்ளது. இதில் 13 போட்டியாளர்களின் 11 போட்டியாளர்கள் நாமினேட் ஆகியுள்ளார்கள்.
ஆம், இந்த வாரம் கேப்டனான விஷால் மற்றும் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வைத்துள்ள ஜெப்ரி, இவர்கள் இருவரையும் தவிர்த்து மற்ற 11 போட்டியாளர்களும் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம், இதிலிருந்து யார் வெளியேறப்போகிறார் என்று.