நடிகர் சூரி பின்னணி நடிகராக இருந்து, காமெடியனாக பாப்புலர் ஆகி அதன்பிறகு தற்போது ஹீரோவாக படங்கள் நடித்து வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த விடுதலை படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
நடிகர் சூரி ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்றபோது பல படங்களில் சின்ன சின்ன வேலைகள் செய்து இருக்கிறாராம்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படையப்பா படத்தில் நடிகர்களுக்கு fan போடும் வேலையை சூரி செய்து இருக்கிறாராம். தற்போது பேட்டி ஒன்றில் அவர் இதை கூறி இருக்கிறார்.
அஜித்தின் வில்லன் படத்தின் செட்டிலும் சூரி பணியாற்றினாராம். அந்த தகவலை கேட்டு கே.எஸ்.ரவிகுமாரே ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்.