தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை குறித்து மீண்டும் கேள்வி

15

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை தொடர்பில் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கட்சியின் பொருளாதார கொள்கை தொடர்பில் இதுவரையில் சரியான தகவல்களை வெளியிடவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தமது அரசாங்கம் செயற்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அரச தொலைக்காட்சியொன்றில் கூறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் ரில்வின் சில்வா, லால்காந்த, சுனில் ஹந்துனெத்தி மற்றும் வசந்த சமரசிங்க போன்ற தலைவர்கள் சர்வதேச நாணய நிதியத்தினால் எந்தவொரு நாடும் முன்னேறியதில்லை என கூறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பயணிக்க முடியாது எனவே ரில்வின் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தமது கட்சிக்கு நிலையான பொருளாதார கொள்கை காணப்படுவதாகவும் அதற்கு அனைவரும் பொறுப்பு சொல்வதாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் விவாதங்களை நடாத்துவதற்கு வருவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.