எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் மழை கூடுதல் அளவில் பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆய்வாளர் சிறிமால் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மேல், சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் நாள் முழுவதிலும் இடைக்கிடை மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியாலங்களில் கிரிந்திவெல பகுதியில் 79.9 மில்லிமீற்றர் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Comments are closed.