13 நாட்களில் அமரன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

24

சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் படமாக மாறியுள்ள அமரன் 13 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி தீபாவளிக்கு வெளிவந்த படம் அமரன்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் நடிகை சாய் பல்லவி. கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள அமரன் 10 நாட்களில் ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த நிலையில் 13 நாட்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அமரன் படம் 13 நாட்களில் உலகளவில் ரூ. 260 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரூ. 300 கோடியை அமரன் தொடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments are closed.