சீரியல்கள் எல்லாம் இப்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அப்படி ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை சீரியல். இந்த தொடரில் இப்போது பரபரப்பான கதைக்களம் ஒன்று சென்று கொண்டிருக்கிறது.
இன்றைய எபிசோடில் விஜயா சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்கிவிட்டார் என்று கூறி மீனா மற்றும் குடும்பத்தினர் சந்தோஷம் அடைகின்றனர்.
ஆனால் ரோஹினி எப்படி வாபஸ் வாங்கினார் என குழம்ப, சிட்டியும் சத்யா தப்பித்தது பற்றி அறிந்து கோபம் அடைகிறார்.
பிரச்சனை சுமூகமாக முடிய விஜயாவை வீட்டிற்கு வர கூறி முத்து மற்றும் மீனா பார்வதி வீட்டிற்கு செல்கிறார்கள். விஜயா எனக்கு மரியாதை இல்லாத இடத்திற்கு வர முடியாது என கூறுகிறார்.
உடனே முத்து, பார்வதியிடம் இப்படி தான் அப்பாவின் நண்பர் மனைவி அம்மாவை போல கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டாராம். அவர் கூப்டு கூப்டு பார்த்தாராம் அவங்க வரல அதனால விவாகரத்து செய்துவிட்டார் என கூறுகிறார்.
இதனை கேட்டு விஜயா கடும் ஷாக் ஆகிறார், அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments are closed.