சுஷாந்த் சிங் தற்கொலை செய்த வீட்டில் குடியேறிய சிம்பு பட நடிகை.. அங்கிருந்து வெளியிட்ட வீடியோ

18

தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ்பெற்றவர் சுஷாந்த் சிங். அவர் கடந்த 2020ல் அவரது அபார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த தற்கொலைக்கு பிறகு அந்த அபார்ட்மெண்ட் வீடு பூட்டிய நிலையில் தான் இருந்தது.

அந்த வீட்டுக்கு யாருமே குடிவர விரும்பவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த அபார்ட்மெண்டை நடிகை அடா ஷர்மா வாங்கி இருக்கிறார். சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் நடித்தவர் தான் அடா ஷர்மா.

அதில் அவர் குடியேறி இருக்கும் நிலையில் அங்கு பூஜை செய்து பஜனை பாடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

Comments are closed.