பிரபாஸ் உடன் இணையும் கொரியன் சூப்பர்ஸ்டார்.. முரட்டு சம்பவம் லோடிங்

9

இந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் பிரபாஸ் தற்போது ராஜா சாப் எனும் படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக திகில் கதைக்களத்தில் பிரபாஸ் நடித்து வருவதால், படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

பிரபாஸ் அடுத்ததாக கைவசம் வைத்திருக்கும் படங்களில் ஒன்று ஸ்பிரிட். இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து த்ரிஷா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

அதே போல் கொரியன் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் Ma Dong-seok இப்படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. இவரை ரசிகர்கள் டான் லீ என செல்லமாக அழைப்பார்கள்.

இவருடைய ஆக்ஷனுக்கு பல கோடி ரசிகர்கள் உலகளவில் உள்ளனர். ஸ்பிரிட் படத்தில் இவர் நடிக்கிறார் என செய்தி வந்திருந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்த நிலையில், பிரபாஸின் சலார் 2 படத்தை குறிப்பிட்டு டான் லீ தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அவர் பிரபாஸ் உடன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால், ஸ்பிரிட் படத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சலார் 2 படத்தை குறிப்பிட்டு டான் லீ பதிவை வெளியிட்டுள்ள அனைவரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.