200 கோடிக்கும் மேல் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

13

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றியை வசூலை வைத்து தீர்மானிக்கப்பட்டு வருகிறது. ஒரு படம் வெளிவந்துவிட்டால், அப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு, இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு என்பதை ரசிகர்களே இணையத்தில் போட துவங்கிவிட்டனர்.

மேலும் தயாரிப்பு நிறுவனமும் தங்களுடைய படங்கள் ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டது, ரூ. 200 கோடி வசூல் செய்துவிட்டது என அறிவிப்பை சமீபகாலமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்றால் கண்டிப்பாக இந்த வசூல் விவரங்களை தயாரிப்பு நிறுவனமே கொடுத்து வருகிறது.

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள சிவகார்த்திகேயன் படமும் 10 நாட்களில் ரூ. 200 கோடியை கடந்துவிட்டது என ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் என்னென்ன, அது யார்யாருடைய படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

ரஜினிகாந்த் : எந்திரன், கபாலி, பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன்
விஜய் : மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ, கோட்
அஜித் : துணிவு
கமல் ஹாசன் : விக்ரம்
பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2
சிவகார்த்திகேயன் : அமரன்

Comments are closed.