விஜய் டிவியின் பிக்பாஸ் 8வது சீசனை இவர்தான் ஜெயிப்பார்?… தர்ஷா குப்தா கூறியது யாரை?

9

இப்போது தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் 8.

விஜய் சேதுபதி தொகுப்பாளராக புதியதாக களமிறங்கியுள்ள இந்த சீசனிற்கும் ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை இந்த 8வது சீசனில் இருந்து ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா என 3 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்த வாரம் நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுமையாக காண்போம்.

கடைசியாக பிக்பாஸ் 8 சீசனில் இருந்து வெளியேறியவர் தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி, சீரியல் மற்றும் சில படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் அதிகம் போட்டோ ஷுட்கள் மூலம் தான் பிரபலம் ஆனார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிக்பாஸ் 8வது சீசனில் யார் ஜெயிப்பார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், ஆண் போட்டியாளர்களில் முத்துக்குமரனும், பெண் போட்டியாளர்களில் சௌந்தர்யாவும் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒருவேளை வைல்டு கார்டாக நான் உள்ளே சென்றால் நான் தான் ஜெயிப்பேன், டைட்டிலை ஜெயிக்கவில்லை என்றாலும் Finalist ஆக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.