அமரன் மாபெரும் வெற்றி! ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த ஹீரோ இவர் தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

19

ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ், ஜோடி ஆகிய நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார்.

ரங்கூன் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் அமரன். சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடித்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் அடுத்ததாக யார் நடிக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் இயக்குனராகவும் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் தனுஷுடன் தான் இயக்குனர் ராஜ்குமார் இணைந்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.

பூஜையில் தனுஷின் நண்பரும், முன்னணி இயக்குனருமான வெற்றிமாறனுக்கு கலந்துகொண்டுள்ளார்.

Comments are closed.