டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் இருந்து பாரிஸுக்கு புறப்பட்ட ஏர் கனடா விமானம் திடீரென தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.
ஜூன் 5ம் திகதி டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட ஏர் கனடா விமானம் AC 872, கிளம்பிய சற்று நேரத்திலேயே சிக்கலான சூழ்நிலையை சந்தித்தது.
ஆரம்ப அறிக்கைகள் விமானத்தின் வலது இன்ஜினில் ஏற்பட்ட பிரச்சனையை சுட்டிக்காட்டுகின்றன.
இன்ஜினில் இருந்து தீப்பிழம்புகள் வருவதை வீடியோக்கள் காட்சிப்படுத்தின, இதனால் விமானக் குழுவினர் அவசர நிலையை அறிவித்து டொரண்டோவில் அவசர தரையிறக்கம் செய்தனர்.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பதிவுகள், தீ பற்றியது குறித்து கட்டுப்பாட்டாளர்களை விமானிகள் எச்சரித்த அவசர நிலையை காட்டுகிறது.
அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த கிட்டத்தட்ட 400 பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஏர் கனடா செய்தி தொடர்பாளர் இந்த சம்பவத்தை என்ஜினுக்குள் இருந்த கம்ப்ரசரில் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என கூறினார்.
மேலும் போயிங் 777-300ER என்ற இந்த விமானம் பரிசோதிக்கப்பட்டு, சேவைக்கு திரும்புவதற்கு முன்பு மேலும் மதிப்பீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.