முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி கொல்லப்பட்டது தொடர்பான போஸ்டர்களை வெளியிட்டு, காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினர், கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு அச்சத்தை ஏற்படுத்த முயல்வதாக இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
கனடாவின் வான்கூவரில், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்கள், முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி கொல்லப்பட்டது தொடர்பான போஸ்டர்களை ஒட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சரான Dominic LeBlanc, வன்முறையைத் தூண்டுதல் கனடாவில் ஏற்றுகொள்ள இயலாதது என்று கூறியுள்ளார்.
அத்துடன், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா ஆர்யாவும் (Chandra Arya), இந்த போஸ்டர்கள் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள அந்த போஸ்டர்கள் கனடாவில் வாழும் இந்து கனேடியர்களுக்கு வன்முறை குறித்த அச்சத்தை உருவாக்கும் முயற்சி என்று கூறியுள்ளார் அவர்.
Comments are closed.