நடிகர் அஜித் குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அஜித்தின் மாஸான இன்ட்ரோ பாடலின் ஷூட்டிங் நடைபெற்றது. இந்த ஷூட்டிங் முடிந்தவுடன் அஜித் விடாமுயற்சி படத்தில் இணைவார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் பிரபல மலையாள நடிகர் நஸ்லன் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் இவர் அஜித்தின் மகனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
அண்மையில் நஸ்லன் நடிப்பில் வெளிவந்த பிரேமலு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மலையாளத்தில் உருவான இப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.